/
குருதிநீரா தண்ணீர்க்குத் தீர்வாய் ஆகும்
குடிப்பதற்கு இரத்தத்தைக் கொடுப்போ ருண்டோ
பெருமையுடன் பாரதத்தின் புதல்வ ரென்று
பேசுவது எல்லாமும் பொய்மை தானோ
தருவதுவும் பெறுவதுவும் இரத்த லன்று
தமிழர்தம் பண்டுதொட்ட உரிமை யாகும்
அருவருப்பாய் உள்ளதிங்கே நீருக் காக
அண்டைமக்கள் அன்புதனை புதைப்ப தெல்லாம் !
காற்றுதனை அணைகட்டித் தடுப்போம் என்றும்
கதிரவனைத் திரையிட்டு மறைப்போம் என்றும்
சாற்றுகின்ற மதியிழந்த மனிதர் போன்று
சாற்றுகின்றார் காவிரியைத் தாரோ மென்று
வேற்றுநாட்டு மக்களாஇத் தமிழ ரிங்கே
வேறுபாட்டை எதற்காகக் காட்டு கின்றார்
நேற்றுவரை திராவிடத்தின் இனமாய் சேர்ந்தே
நெஞ்சினிலே இணைந்தொன்றாய் இருந்தோ ரன்றோ !
நரபலிகள் வாகனங்கள் எரிய வைத்தல்
நம்தலையில் நாம்தீயை வைத்த லாகும்
அரசியலை வெறியுணர்வை ஒதுக்கி வைப்போம்
ஆராய்ந்து நீதியினை நிலைக்க வைப்போம்
அரசுமூன்றும் ஒன்றமர்ந்து மாநி லங்கள்
ஆறுகட்குப் பொதுதிட்டம் வகுக்க வைப்போம்
நிரந்தரமாய்த் தீர்வுகாண நதிகள் தம்மை
நீள்நாட்டு உடைமையென சட்டம் செய்வோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

